மாணவர்களுக்கிடையில் மோதல் - ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
Ratnapura
Sri Lanka
Sabaragamuwa Province
By Pradheepan
கஹவத்தை மத்திய மகா வித்தியாலயத்தின் ஒன்பதாம் தர மாணவன் ஒருவர் அதே பாடசாலையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த மாணவன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நீதியான விசாரணையை மேற்கொள்ளுமாறு காவல்துறையினரிடம் கோரி பிரதேசவாசிகள் சிலர் கஹவத்தை பிரதேசத்தில் கொழும்பு - எம்பிலிபிட்டிய பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.