இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தமிழரசுக் கட்சி !

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran Mavai Senathirajah
By Independent Writer Sep 02, 2024 12:01 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report
Courtesy: Dharu

பலமான தரப்பிடம் ஆலோசனை நடத்தாமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு சஜித்திற்கு (Sajith Premadasa) ஆதரவு என்ற முடிவு எட்டப்பட்டுள்ளதாக வடக்கு அரசியல் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

வவுனியாவில் (Vavuniya) நேற்று (02) இடம்பெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில் சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம் எனவும், அரியநேத்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும் அக்கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். எ சுமந்திரன் (M.A. Sumanthiran) அறிவித்திருந்தார்.

இந்த செய்தி வெளிவந்த சிறிது நேரத்தில், இது கட்சியின் முடிவல்ல என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah)மறுப்பு தெரிவித்திருந்தார்.

தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம்

தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம்

இந்தியாவின் நிலைப்பாடு

இந்த விடயத்தில் உற்றுநோக்கவேண்டிய மற்றுமொரு விடயம் இந்தியாவின் நிலைப்பாடு. கொழும்பு (Colombo) பாதுகாப்பு மாநாட்டில் நிலைமைகளை ஆராயும் பொருட்டு இலங்கை (Sri Lanka) வந்த இந்திய (India) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தமிழ் தேசியத்தின் தலைவர்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருந்தார்.

இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தமிழரசுக் கட்சி ! | Sumandiran S Sajith Endorsement Controversy

இதில், தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது அஜித் தோவல் (Ajit Doval) இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது

சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் !

சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் !

மாவை சேனாதிராஜா

இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்றும் தான் கருதுவதாக அவர் விளக்கியிருந்தமையும் நோக்களத்தக்கது.

இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தமிழரசுக் கட்சி ! | Sumandiran S Sajith Endorsement Controversy

இந்தச் சந்திப்பில் கலந்துக்கொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (Signanam Sridharan). எம்.ஏ.சுமந்திரன். ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும் (Selvam Adaikalanadhan), புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் (Selvarajah Kajendran) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இத்தகைய மாறுபட்ட கொள்கைகளை உடைய தமிழ் தரப்பு எம்.பிக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் வாக்குவீதம் குறித்தும் கேட்டறிந்த தோவால், சில விளக்கங்களை அவர்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

எதிர்மறையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழரசுக்கட்சி

எதிர்மறையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழரசுக்கட்சி

தமிழரசுக் கட்சி

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த சுமந்திரனுக்கு , தென்னிலங்கை அரசியலோடு நகர ஒரு வலியுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தமிழரசுக் கட்சி ! | Sumandiran S Sajith Endorsement Controversy

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும் அவருக்கு ஆலோசனை வழங்கியும் இருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதால் இந்த பேரம் பேசலை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், அதன் பின்னர் சிறந்த தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைப்பவரை ஆதரிப்பது குறித்துத் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இதன் பின்னணிகளில் நேற்று சுமந்திரனால் தமிழரசுக் கட்சி என்ற போர்வையில் ஆதரிக்கப்பட்ட சஜித்தின் தேர்தல் விஞ்சாபன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கையில் அமையப்போகும் அரசாங்கம் : பலம் வாய்ந்த நாடுகளின் விருப்பம் என்ன தெரியுமா...!

இலங்கையில் அமையப்போகும் அரசாங்கம் : பலம் வாய்ந்த நாடுகளின் விருப்பம் என்ன தெரியுமா...!


இதில் ஆண்டாண்டு காலம் உரிமைக்காக போராடும் தமிழ் மக்களுக்கு ஒரு வரி உள்ளதா என்பதை அறிந்துகொள்வோம். 

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்

• வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்

• கடன் நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியம்

• நிதி மற்றும் பரிமாற்ற விகித கொள்கை

• வருமான வளர்ச்சியை அடைதல் • செலவுக் கட்டுப்பாடு

• பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்

• அரசுத்துறை முகாமைத்துவ மற்றும் டிஜிட்டல்மயமாக்கல்

• வலுசக்தி மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தங்கள்

• உற்பத்தி காரணி சந்தை சீர்திருத்தம்

• கமத்தொழில், மற்றும் கால்நடை அபிவிருத்தி

• காணி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம்

• போக்குவரத்து – நெடுஞ்சாலை, கடல் மற்றும் ஆகாயம்

• மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள்

• சுற்றுலாத் துறை

• விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

• கைத்தொழில் துறை

• சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறை 

• இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறை

• நிர்மாணத்துறை

• மின்சக்தி மற்றும் வலுசக்தி

அனைத்து பிரஜைகளையும் வலுப்படுத்தல்

• கல்வி, தொழில்முறை பயிற்சி மற்றும் இளைஞர்கள்

• மகளிர் மற்றும் சிறுவர் வலுப்படுத்தல்

• சுகாதாரம், போசாக்கு, சுதேச மருத்துவம் மற்றும் சமூக நலன்

• வலுப்படுத்தல் மற்றும் சுபீட்சத்தைக் கட்டியெழுப்புதல்

• மாற்றுத்திறனாளிகள்

• ஆதிவாசிகள் சமூகம்

• விளையாட்டுத்துறை

அரச துறையை மேம்படுத்தல்

• இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு ஏற்ற டிஜிட்டல் இலங்கை

• திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கம்

• அரசாங்க சேவை

• கடவுச்சீட்டு வரிசை முடிவுக்கு கொண்டு வருதல்

வாழ்க்கை தரத்தை பாதுகாத்தல்

• மத மற்றும் கலாச்சார விவகாரங்கள்

• ஊடகம் • வீட்டமைப்பு மற்றும் பொது வசதிகள்

• புலம்பெயர்ந்த ஊழியர்கள் மற்றும் வேலை வாய்ப்பு

• மலையக மக்கள்

• ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல்

• ரணவிரு (போர் வீரர்) நலன்

• வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல்

தேசிய பாதுகாப்பு

• ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல்

• வெளிநாட்டு உறவுகள் மற்றும் வர்த்தகக் கூட்டணிகள்

• தேசிய பாதுகாப்பு

• சட்டம் மற்றும் ஒழுங்கு

• ஊழல் எதிர்ப்புச் சட்டம்

• போதைப்பொருட்கள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தல்

• நிலைபெறுதகு சுற்றாடல்

தமிழரசு கட்சியின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு !

தமிழரசு கட்சியின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020