திட்டமிட்டு முடக்கப்படும் கடையடைப்பு போராட்டம்: சுமந்திரன் குற்றச்சாட்டு
வவுனியா பிரதேசம் உட்பட சில இடங்களில் வற்புறுத்தலின் பேரில் சில கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதை, தான் நேரடியாக கவனித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இன்றைய தினம் (18) வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனடிப்படையில் தமிழர் பிரதேசங்களில் சில இடங்களில் கடையடைப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் சில இடங்களில் போராட்டம் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், “சுயமாக மக்கள் முடிவெடுத்து கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்ற போது திட்டமிட்ட ரீதியில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வவுனியா சந்தை பகுதி முற்று முழுதாக மூடப்பட்டுள்ள நிலையில் எங்களது கோரிக்கையை ஏற்று வியாபார தளங்களை மூடியவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் புறக்கணிக்கப்பட்டதன் காரணம் குறித்தும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் தொடர்பிலும் அவர் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
