சிங்கள் பேரினவாதம் எம்மை அடக்குகின்றது: சுமந்திரன் ஆதங்கம்!
பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி சிங்கள் பேரினவாதம் எம்மை அடக்குகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் நேற்று(28) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாராவது ஒருவர் தமிழ்தாய் ஒருவரிடத்தில் ஆயுதமேந்தி போராட போகின்றோம் என கூறுவீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார். இங்கு நாட்டில் வாழும் அனைவருக்கும் நபம் ஆயுதமேந்தி போராட போவதில்லையென்பது தெரிந்த விடயம்.
எமது கோபத்தை சரியான முறையில் ஆராய்ந்து சிந்தித்து வியூகம் அமைந்து செயற்பட்டு வெற்றிக்காண வேண்டும்.
50ற்கும் மேற்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சமஸ்டி ஆட்சிமுறை வேண்டுமென்று ஒன்றாக இருந்தால், யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் சக்தி நாமாக இருப்போம் என்றார்.
மேலும் சமஸ்டியை அடைவதற்கான வழி, நினைவேந்தல் நிகழ்வுகள் , வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்பவரின் உரித்துக்கள் போன்றவை தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |