முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்
M. A. Sumanthiran
Sri Lanka
Sri Lanka Final War
By Shalini Balachandran
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழர் தாயக பகுதிகளில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளானது இன்று (18) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி சுமந்திரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கட்சி உறுப்பினர்கள்
கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்குச் சென்ற அவர், முதலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்