வழக்கு முடிந்த கையோடு கோணேஸ்வரனிடம் ஓடோடி சென்ற சுமந்திரன்!
தமிழரசுக்கட்சி மீதான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் இடம்பெற்றதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் அங்கு விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்றைய தினம்(05) அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சுமந்திரனின் ஆட்சேபனை
குறித்த வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், குறித்த வழக்கு முடிவடைந்ததையடுத்து, எம்.ஏ சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனடியாக விரைந்து சென்று திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதேநேரம், குறித்த ஆலயத்தில் கனடா நலன்புரிச் சங்கத்தின் ஊடாக அன்னதானம் வழங்கப்பட்டதுடன், அன்னதான நிகழ்வினை இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தின் தலைவருமான எஸ்.குகதாசன் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழரசுக் கட்சி மீதான வழக்கை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவந்திருக்கலாம் என எண்ணியிருந்த நிலையில் வழக்கின் எதிராளியான எம்.ஏ சுமந்திரன் முன்வைத்துள்ள ஆட்சேபனை காரணமாக வழக்கு தவணையிடப்பட்டதாக சட்டத்தரணி தவராசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |