யாழ்ப்பாணம் உட்பட இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கப்போகும் சூரியன் : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Jaffna
Department of Meteorology
Climate Change
By Sumithiran
சூரியன் தெற்கு நோக்கி நகர்வதால் ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரையான பத்து நாட்களுக்கு இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி,நாளை (28). நெடுந்தீவு, பூநகரி, தட்டுவன்கொட்டி மற்றும் சுண்டிக்குளம் ஆகிய இடங்களில் நண்பகல் 12:11 மணியளவில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும்.
தேவையில்லாமல் நடமாடுவதை தவிர்க்கவும்
இந்த சூரிய ஒளியில் தேவையில்லாமல் நடமாடுவதை தவிர்க்கவும், வெப்பநிலையின் அதிகரிப்பை ஈடு செய்யும் வகையில் அடிக்கடி ஏராளமான திரவங்களை குடிக்கவும் சுகாதார நிபுணர்கள் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.
"சூரிய வெளிச்சம் அதிகமாக வெளிப்படுவது சிலருக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், எனவே அனைவரும் சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பது நல்லது" என்று நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்