சூரிய மண்டலத்திற்கு வெளியே அபூர்வ வளையம் கண்டுபிடிப்பு
சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகத்தைச் சுற்றி, வாயு, தூசியால் ஆன வளையத்தை விஞ்ஞானிகள் முதன்முறையாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகங்களும் சந்திரன்களும் எவ்வாறு உருவாகின்றன என்பதை தெரிந்துகொள்ள அது உதவும் என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டியது.
கீ.டி.எஸ். 70சி என்று அழைக்கப்படும் கிரகத்தைச் சுற்றி வளையம் அமைந்துள்ளது. வியாழன் கிரகத்தைப் போன்று கிரகத்தின் அளவு உள்ளது.
கீ.டி.எஸ். 70 எனும் நட்சத்திரத்தை அது சுற்றி வருகிறது. யுரோப்பியன் செளதன் வானியல் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கீ.டி.எஸ். 70சி ஐ 2019இல் கண்டுபிடித்தனர்.
அந்த கிரகத்தைச் சுற்றி சந்திரன்களை உருவாக்கக்கூடிய வளையம் உள்ளதாக அஸ்ட்ரோபிசிகல் ஜேர்னல் லெட்டர் ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டது.
அல்மா தொலைநோக்கி மூலம் வளையம் கிரகத்தைச் சுற்றி வருவதை தெளிவாகக் காண முடிகிறது என்று கூறப்பட்டது.