வைரலாகும் சுனிதா வில்லியம்ஸின் புதிய விண்வெளி காணொளி !
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு மாணவர்களின் கேள்விகளுக்கு சுனிதா வில்லியம்ஸ் பதில் அளித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
போயிங் நிறுவனத்தின் ஸ்டர்லைனர் விண்கலத்தில் பயணம் செய்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் இருவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.
நிகழ்நிலை நிகழ்ச்சி
இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள பாடசாலை ஒன்றின் சார்பில் சுனிதா வில்லியம்ஸ் உடன் உரையாடும் நிகழ்நிலை நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்பட்டுள்ளது.
அப்போது விண்வெளியில் Zero Gravity இல் எப்படி தண்ணீர் குடிப்போம் என சுனிதா வில்லியம்ஸ் விளக்கி காட்டியுள்ளார்.
A student gets a demonstration from astronaut, Sunita Williams on how to drink liquids in space. Williams and Barry "Butch" Wilmore hit the six-month mark in space after becoming the first to ride Boeing's new Starliner capsule on what was supposed to be a week-long test flight.… pic.twitter.com/1UQSgvcHsN
— Francynancy (@FranMooMoo) December 6, 2024
அவர் தனது மூடப்பட்டிருந்த Pouches எடுத்து, அதன் நடுவில் ஸ்ட்ரா உள்ளதை காட்டியுள்ளார்.
தண்ணீர் பையை அவர் அழுத்தும் போது நீர்த்துளிகள் வெளியில் மிதக்கிறது.
உடனே அவர் மிதந்து செல்லும் துளிகளை குடிப்பதுடன் இதன்மூலம் அங்கு காற்று இல்லை என்பதால் நீர் மிதப்பதை விளக்குகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |