வடக்கு நோக்கி ஆரம்பமாகிறது ‘யாழ்நிலா’ அதிசொகுசு சுற்றுலா தொடருந்து சேவை
வடக்கு மாகாணத்தை மையப்படுத்தி புதிய சுற்றுலா தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இன்று (25) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வடக்கிற்கான இந்த சுற்றுலா தொடருந்து சேவைக்கு ‘யாழ் நிலா அதி சொகுசு’சேவை என பெயரிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் ஆரம்பம்

இந்த தொடருந்து சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கல்கிஸையிலிருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது. வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த சேவை சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் காங்கேசன்துறை சென்றடையும்.
மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.00 மணிக்கு கல்கிஸையை வந்தடையும். என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.