ரணிலுக்கு ஆதரவு - மொட்டுக்குள் வெடித்தது மோதல்
Dullas Alahapperuma
G. L. Peiris
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
By Sumithiran
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு
சிறிலங்காவின் பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதென பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் தொடர்பில் அந்த கட்சிக்குள் வெளிப்படையான மோதல் ஆரம்பித்துள்ளது.
.பீரிஸ் விளக்கம் கோரியுள்ளார்
பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்த கருத்து தொடர்பில் அதன் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கம் கோரியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பு விதிகளின்படி எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு
இதேவேளை நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள பொதுஜன பெரமுனவின் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க வுள்ளதாக பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
