சிறிலங்கா அரசிடம் மாலைதீவு முன்வைத்த கோரிக்கை..!
இலங்கையின் விவசாயத் துறையின் ஆதரவை மாலைதீவுக்கும் வழங்குமாறு மாலைதீவு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மாலைதீவு அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மாலைதீவு விவசாய, மீன்பிடி மற்றும் கடல்சார் அமைச்சர் ஹுசைன் ரஷீத் ஹசன் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை விவசாய அமைச்சில் சந்தித்த போதே ஹுசைன் ரஷீத் ஹசன் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
பசுமை வீட்டு பயிர்ச்செய்கை
இலங்கையில் பசுமை வீட்டு (நெட் ஹவுஸ்) பயிர்ச்செய்கை குறித்து கவனம் செலுத்திய மாலைதீவு அமைச்சர், அதே தொழில்நுட்பத்தை மாலைதீவிற்கும் வழங்குமாறும், ஒரு குழுவினருக்கு பயிற்சி அளிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
