மக்கள் தடிகளால் தாக்கினால் ஆதரவளிக்கத் தயார் - ஆளும் தரப்பு எம்.பி அறிவிப்பு
தொழிற்சங்க போராட்டத்தினால் பெருமளவில் பாதிக்கப்படுவது மக்களே. எனவே அவர்கள் தடிகள் அல்லது கற்களினால் தாக்கினால் அதற்கு ஆதரவளிக்கத் தயாரென ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி(Tissa Kuttiyarachchi) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிற்சங்க போராட்டத்தினூடாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது, அதனால் மக்களே பெருமளவு பாதிப்படைகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கென தனியான சங்கமொன்று இதுவரையில் உருவாகவில்லை.
ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கமொன்றை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கமொன்றை உருவாக்கி அதனூடாக, தடிகளை மக்கள் கைக்கு எடுக்க வேண்டும்.
மக்கள் தடிகளால் தாக்கினாலும் சிக்கல் இல்லை. கல்லால் தாக்கினாலும் சிக்கல் இல்லை. எதுவாக இருந்தாலும் அதற்கு ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
