அதிபர் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: டயனா கமகே பகிரங்கம்
Ranil Wickremesinghe
UNP
Election
Sri Lanka Presidential Election 2024
By Laksi
நாட்டின் தற்போதைய முறைமைக்கமைய நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அவசியம் என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தனது ஆதரவு என்றும் அவர் கூறினார்.
அதிபர் தேர்தல்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, "இந்த நாட்டை மீட்கக் கூடிய ஒருவருக்கே சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஆதரவு வழங்கப்படும். அதனை ரணில் விக்ரமசிங்க செய்து வருகின்றார்.
எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்கள் ஆணையுடன் அவர் பதவிக்கு வர வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அதிபர் ரணிலுக்கு ஆதரவு வழங்கியமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கமே நிற்பேன். ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் கூட ஏற்கப்போவதில்லை" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி