யுத்தம் முடியும்வரை உக்ரைனுக்கு ஆதரவளிப்போம் - பிரிட்டன், அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு!
உக்ரைன் - ரஷ்ய யுத்தம் முடியும் வரை உக்ரைனுக்கு ஆதரவு வழங்க அமெரிக்காவும், பிரிட்டனும் உறுதி அளித்துள்ளன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கனும், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலெவர்லியும் இணைந்து ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிகளை மீட்பது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது.
உதவித் திட்டங்கள்
உக்ரைனுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா 1.2 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.
உக்ரைனின் ஆகாயத் தற்காப்புக்கும், ஆயுதங்களுக்கும் குறித்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் வழிநடத்தும் ஒரு ஐரோப்பியக் குழு உக்ரைனுக்கு நெடுந்தொலைவு ஏவுகணைகளை வழங்கும்படி நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த குழுவில் (International Fund for Ukraine) நோர்வே, நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன் ஆகியவை உள்ளன.
