சிச்சியின் ரொக்கெட் விவகாரம்: ராஜபக்சர்களை இலக்கு வைத்த அரசாங்க தரப்பு
"சிச்சியின் ராக்கெட்" என்று பரவலாகக் குறிப்பிடப்படும் சுப்ரீம்சட் செயற்கைக்கோள் விவகாரத்தை தனியாக ஆராயாமல் ராஜபக்சர்களுடன் தொடர்புடைய பிற நடவடிக்கைகளுடன் சேர்த்துக் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்சவின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் எந்தப் பணத்தையும் செலவிடவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
பிரதமரின் அறிக்கை
இதன்படி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சுப்ரீம்சட் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருமானம் குறித்து நாடாளுமன்றில் வெளியிட்ட அறிக்கை தற்போது சர்ச்சை கிளப்பியுள்ளது.
அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரின் கூற்றை அறிக்கையை நிராகரித்து, முதலீட்டு சபை (BOI) பிரதமருக்கு தவறான தரவை வழங்கியுள்ளதாகவும் செயற்கைக்கோளை காணவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும், இது தொடர்பில் அறிவிப்பொன்றை விடுத்த சுப்ரீம்சட் நிறுவனம், அதன் செயற்கைக்கோள் 87.5° கிழக்கில் சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இந்த திட்டத்திற்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்படவில்லை என கூறியிருந்தது.
ராஜபக்சக்களின் நடவடிக்கைகள்
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நளிந்த, “ஒரு செயற்கைக்கோள் இவ்வளவு அதிக வருமானத்தை ஈட்டியிருந்தால், ராஜபக்சக்கள் கடந்த 13 ஆண்டுகளாக அமைதியாக இருந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அவர்கள் தங்களுக்கும் பயனளிக்காமல் நாட்டிற்கு ஏதாவது நன்மை செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
தொடர்ந்து நடைபெறும் விசாரணைகள் உண்மையை வெளிப்படுத்தும், இந்தத் திட்டத்தைத் தனியாக ஆராயக்கூடாது, இது ராஜபக்சர்களுடன் தொடர்புடைய பிற நடவடிக்கைகளுடன் சேர்த்துக் கருத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
