நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அனைத்துப் பதவிகளில் இருந்து நீக்கம்
politics
Dayasiri Jayasekara
srilankan
suren raghavan
Deputy Secretary
By Kalaimathy
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்த கடிதம் ஒன்றின் மூலம் சுரேன் ராகவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, கட்சியின் பிரதிச் செயலாளர், வன்னி மாவட்ட பிரதிநிதி மற்றும் சர்வதேச விவகார செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி