தலைமைத்துவத்தை நிராகரித்தேன் - டோனிதான் காரணம் ; மனம் திறந்த சுரேஷ் ரெய்னா
துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா.
இவர் 2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி, 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி ஒரு தூண் என்றால் இன்னொரு தூண் சுரேஷ் ரெய்னாதான்.
மனம் திறந்த சுரேஷ் ரெய்னா
இந்நிலையில், அண்மையில் சுரேஷ் ரெய்னா வழங்கிய செவ்வி ஒன்றில், தனக்கு வந்த தலைமை பதவிக்கான வாய்ப்புகள் குறித்த சில விடயங்களை பகிர்ந்திருக்கிறார்.
“நான் உத்தரப் பிரதேசம் மற்றும் சி.எஸ்.கே அணிகளுக்கு அணித் தலைவராக இருந்திருக்கிறேன்.
பல அணிகள் என்னை தலைவராக பொறுப்பேற்று விளையாடுவதற்கு கூப்பிட்டன.
ஆனால் நான் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.
காரணம், தோனி எப்பொழுதும் என்னிடம் 'நான் தலைவர், நீ துணைத் தலைவர், நீ எங்கும் செல்லக்கூடாது' என அடிக்கடி சொல்லுவார்.
நான் என்னை எப்போதும் அணிக்கான வீரராகத்தான் உணர்ந்திருக்கிறேன்.
சக வீரர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பது என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது" எனத் தெரிவித்திருக்கிறார்.
