எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சுரேஷ் சலே மேல்நீதிமன்றில் முன்னிலை
CID - Sri Lanka Police
Supreme Court of Sri Lanka
Suresh Salley
By Sindu
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குனர் சுரேஷ் சலே கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல் மற்றும் அதைத் தொடர்ந்து காணாமல் போனது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம்
அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அவரை மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி