போதைப்பொருளுடன் சிக்கிய முச்சக்கர வண்டி சாரதி
Sri Lanka Police
Kegalle
Sri Lanka
By Raghav
கேகாலை (Kegalle) காவல்துறை பிரிவுக்குட்பட்ட மொலகொட பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைபொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் (Criminal Investigation Department ) அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இன்று காலை (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போது, சாரதியிடம் 31 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

வலகம தெற்கு, தெவலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்