கைதிகளின் உணவு தொடர்பில் அவசர அறிவிப்பு
காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் வெளியாட்கள் கொண்டு வரும் உணவுகளை வழங்கக்கூடாது என கொழும்பு தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காவல்துறை செய்தியொன்றை விடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுருப்புத்தெரு காவல்துறை அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அந்நியர் ஒருவர் அதிக விஷம் கலந்த பாலைக் கொடுத்த சம்பவத்துடன் இந்த காவல்துறை செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு
கொழும்பு தெற்குப் பிரிவுக்குட்பட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நெரஞ்சன் அபேவர்தனவின் கையொப்பமிடப்பட்ட காவல்துறை செய்தி, கொழும்பு தெற்குப் பிரிவின் நாரஹேன்பிட்டி, கிருலப்பனை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, பொரளை மற்றும் குருந்துவத்தை ஆகிய காவல் நிலையங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டிச்சாலை உணவு மட்டுமே
சந்தேக நபருக்கு சிற்றுண்டிச்சாலை உணவு மட்டுமே கொடுக்க வேண்டும். குறித்த காவல்துறை செய்தி தொடர்பில் ஏனைய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் உப சேவை அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |