இலங்கை தொடர்பில் இரண்டு நாடுகள் எடுத்த முடிவு
பயண எச்சரிக்கை
கடுமையான பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு போக்குவரத்து சீரின்மை மற்றும் உணவுப்பொருள் விலையேற்றம் காரணமாக பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கான தமது நாட்டு பிரஜைகளின் பயணத்திற்கான எச்சரிக்கையை விடுத்திருந்தன.
இதனால் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவது குறைந்து உல்லாச பயணத்துறை கடுமையாக வீழ்ச்சி கண்டது.இதனால் இலங்கைக்கு பெருமளவு வருமானத்தை அள்ளித் தரும் உல்லாச பயணத்துறை கடும் நெருக்கடியை சந்தித்தது.
தளர்த்தப்பட்ட பயண ஆலோசனை
இந்த நிலையில் இலங்கையின் நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பயண எச்சரிக்கையை விடுத்திருந்த நாடுகள் அதனை நீக்கியதை அடுத்து உல்லாச பயணிகளின் வருகையில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டது.
தற்போது சுவீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, இந்த நாட்டில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை எதிர்பார்த்ததை விட முன்னதாகவே மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
