வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்: வெளியான காரணம்!
சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருந்து ஜேர்மனுக்கு (German) செல்ல புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூரிச் (Zurich) விமான நிலையத்தில் இருந்து நேற்று (26) பெர்லினுக்கு சென்ற LX974 என்ற சுவிஸ் விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமானம் நேற்று காலை 7.42இற்கு விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது.
அசாதாரணமான வாசனை
எனினும், 18 நிமிடங்களில் குறித்த விமானம் மீண்டும் சூரிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானியின் அறையில் அசாதாரணமான வாசனை உணரப்பட்டதை அடுத்தே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக, சுவிஸ் விமான நிறுவனப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், பல தீயணைப்பு வாகனங்களும் அங்கு விரைந்து சென்ற நிலையில், பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
