அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: யார் இந்த கமலா ஹாரிஸ்!
அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து வேட்பாளராக அந்நாட்டு துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டு வருகின்றது.
வல்லரசான நாடாக கருதப்படும் அமெரிக்காவின், ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில், முக்கிய கட்சிகளான, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவருக்கு எதிராக குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் அதிபர் தேர்தலில் களமிறங்கினர்.எனினும் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகியுள்ளார்.
யார் இவர்
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸின் பெயர் முன்மொழியப்பட்டு வரும் நிலையில் யார் இவர் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
1964ஆம் ஆண்டு ஒக்டோபரில் கமலாதேவி ஹாரிஸ் அமெரிக்காவின் ஓக்லாந்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர்.
தாய் சியாமளா சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். கமலா ஹாரிஸுக்கு 7 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் விவாகரத்து செய்து விட்டனர்.
அரசியல் வாழ்க்கை
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்ற கமலா ஹாரிஸ் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றுள்ளார்.
வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 2004 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றினார்.
பின்னர் 2011 முதல் 2016ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனரலாகவும் இருந்தார். இதன் மூலம் கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக செயல்பட்ட முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றார். 2012 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக மாநாட்டில் இவர் ஆற்றிய உரை இவரின் அரசியல் வாழ்க்கைக்கு வழிவகுத்தது.
இந்திய வம்சாவளி
2016ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் இருந்து அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமெரிக்க செனட் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வானது அதுவே முதல் முறையாகும்.
செனட் சபையில் நடந்த விசாரணைகளில் துல்லியமான கேள்விகளால் பலரது கவனத்தையும் ஈர்த்தார். குறுகிய காலத்திலேயே ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகவும் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். அதிபர் டிரம்ப் மீது புள்ளி விவரங்களோடு இவர் வைத்த குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியிலும் இவரை நெருக்கமாக்கியது.
முதல் பெண் ஜனாதிபதி
மேலும்,கமலா ஹாரிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு மைக் பென்ஸை வீழ்த்தி, துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது,2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார். தேர்தல் கருத்துகணிப்பிலும் டொனால்ட் ட்ரம்ப்பை விட முன்னிலை வகிக்கின்றார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற்றால் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.