இரு தசாப்தங்களின் பின் சுவிஸில் மறுமலர்ச்சி கண்ட கால்பந்தாட்ட மைதானம்!
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜேக்கப் பார்க் கால்பந்தாட்ட மைதானம் இரண்டு தசாப்தங்களின் பின் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பாஸல் (Basel) நகரில் உள்ள ஜேக்கப் பார்க் கால்பந்தாட்ட மைதானமானது 2001ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த மைதானம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க புதுப்பிக்கப்படுகின்ற நிலையில் பாஸல் (Basel) நகர்ப்புறத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகின்றது.
35,600 இருக்கைகள்
அதேவேளை, இந்த மைதானமானது 35,600 இருக்கைகளை கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிப்புகளானது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கிறது.
மேலும், மைதானத்தின் சமூக நலனை வலியுறுத்தும் வகையில், மொட்டை மாடி சுற்றளவு விரிவாக்கம் பார்வையாளர்களின் ஓட்டத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெரிய கேலரி இடங்கள், நூலகம், ஆடிட்டோரியம் மற்றும் பிற பொது வசதிகள் முழுவதும் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
