தகராறு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்! 38 வயதான நபர் பலி
வாள்வெட்டுத் தாக்குதல்
கட்டுநாயக்க காவல்துறை பிரிவிற்குட்பட்ட மஹகம, ஹீனடியான பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மஹகம, ஹீனடியான பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதான முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானவர் ஆவர்.
நேற்றிரவு (17) முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதாக வீட்டாருக்கு அறிவித்துவிட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார்.
செல்லும் வழியில் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் குறித்த நபரை வாள்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழப்பு
தாக்குதலுக்கு இலக்கான நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்