தமிழர் பகுதியில் வாள்வெட்டு - குடும்பஸ்தர் ஒருவர் பலி
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (12.02.2023) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சண்முகசுந்தரம் யசோதரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மரணவீடு ஒன்றில் இடம்பெற்ற கருத்து முரண்பாடே இந்த சம்பவத்திற்கு வழிவகுத்தென தெரியவந்துள்ளது.
15 பேர் கொண்ட குழு

இதன்போது 15 க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழு வாளினால் சரமாரியாக வெட்டியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவை சேர்ந்த ஒருவருமாக நால்வரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துடன், மேலும் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        