இனம்தெரியாத கும்பல் கிளிநொச்சியில் அட்டகாசம்!! அதிகாலையில் நடந்த துயர்
கிளிநொச்சி - புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் வைத்து இனம்தெரியாத குழுவினரால் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கண்ணிவெடிப் பிரிவில் தொழில் புரியும் புண்ணியமூர்த்தி மோகனவதனன் (28) என்பவர் மீதே இனம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்றைய தினம் (23) தொழில் நிமித்தம் அதிகாலை வேளைபுறப்பட்டுச் சென்ற பொழுது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த அவர் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
