ரி20 உலககிண்ணம்: வங்கேதச அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : ஐசிசி விதித்துள்ள ஒருநாள் கால அவகாசம்
வங்கதேச அணி ரி 20 உலகக் கோப்பையில் விளையாட இந்தியா செல்லாவிட்டால், அந்த அணிக்கு பதிலாக வேறொரு அணிக்கு அந்த வாய்ப்பை வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) இன்று (21) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, வங்கதேச அரசு மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு அவர்களின் இடத்தில் வேறு நாட்டு அணி மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
வங்கதேசம் இந்தியாவுக்கு பயணம் செய்ய மறுத்தது குறித்து விவாதிக்க ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளின் இயக்குநர்கள் பங்கேற்ற இன்று(21) நடைபெற்ற ஒரு முக்கியமான கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய கூட்டத்திற்குப் பிறகு ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் மாற்று அணியை நியமிப்பதற்கு ஆதரவாக பெரும்பாலானோர் வாக்களித்ததாக கூறப்படுகிறது.
விதிக்கப்பட்ட ஒருநாள் கால அவகாசம்
இருப்பினும், இந்தியாவில் விளையாடுவது குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வங்கதேச கிரிக்கெட் சபைக்கு ஐசிசி மேலும் ஒரு நாள் அவகாசம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வங்கதேசம் தனது முடிவை மாற்றவில்லை என்றால், ஸ்கொட்லாந்து வங்கதேசத்திற்கு பதிலாக குழு 'சி'யில் போட்டியிடும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |