யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட T56 உள்ளிட்ட ஆயுதங்கள்...! உள்ளே வந்த கால பின்னணி

Sri Lanka Police Jaffna University of Jaffna Sri Lanka Police Investigation Gun Violence
By Thulsi Nov 01, 2025 03:11 AM GMT
Report

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) மீட்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சுமார் 20 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சந்தேகிக்கப்படுகின்றது.

நூலகத்தின் கூரைத் திருத்த வேலைகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. 

அதன்போது கூரைக்குள் இரண்டு மகஸின்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

யாழ் பல்கலை வளாகத்தில் பரபரப்பு : தொடர்ந்து மீட்கப்படும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்

யாழ் பல்கலை வளாகத்தில் பரபரப்பு : தொடர்ந்து மீட்கப்படும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்

காவல்துறையினர் விசாரணை

அதனையடுத்து கோப்பாய் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறை விசேட அதிரடிப் படையினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் ஒத்துழைப்புடன் மகஸின்கள் இரண்டையும் மீட்டதுடன் அதன் அருகில் சுமார் ஐந்தடி நீளமான வயரையும் மீட்டனர்.

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட T56 உள்ளிட்ட ஆயுதங்கள்...! உள்ளே வந்த கால பின்னணி | T56 Assault Rifle Found Within Jaffna Uni Premises

அதன்பின்னர் கூரைக்குள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் எனும் சந்தே கத்தில் கூரையினுள் தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்த வேளை, ரி - 56 ரக துப்பாக்கி ஒன்று மேலும் இரண்டு மகஸின்கள், மூன்று சிறிய குண்டுகள்.

கிளைமோரை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்துப் பொருட்கள், சேலைன் போத்தல், பஞ்சு, காயங்களுக்குக் கட்டும் பன்டேஜ், இரத்தக்கறையுடன் சாரம் உள்ளட்டவை மீட்கப்பட்டன.

மக்களே இன்று முதல் கட்டாயம் பணம்...! நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

மக்களே இன்று முதல் கட்டாயம் பணம்...! நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

அடுத்த கட்ட நடவடிக்கை

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் அனைத்தும் கோப்பாய் காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை அது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட T56 உள்ளிட்ட ஆயுதங்கள்...! உள்ளே வந்த கால பின்னணி | T56 Assault Rifle Found Within Jaffna Uni Premises

அதனையடுத்து மன்றினால் வழங்கப்படும் கட்டளைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, துப்பாக்கி மகஸின்கள் சுற்றப்பட்டு இருந்த பத்திரிகை, சேலைன் போத்தலின் காலாவதி திகதி என்பவற்றின் அடிப்படையில் அவை 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூரைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்தவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்தவருக்கு நேர்ந்த துயரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024