வலுவடையும் காற்றழுத்த தாழ்வு: வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு எச்சிக்கை
நாட்டின் கிழக்குப் பகுதியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்துவரும் நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்குக் கரையை அண்மித்தவாறு வடக்கு நோக்கி நகரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று இரவு முதல் தானியங்கி முறையில் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக விநாடிக்கு 150 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மகாவலி ஆற்றை அண்மித்த பகுதி
இதனால், கொத்மலை ஓயா மற்றும் அணைக்கட்டுக்குக் கீழ்ப்பகுதியில் மகாவலி ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயத்தால் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
எனினும், அபாய நிலை தொடர்வதால் குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.
மேலும், மழைவீழ்ச்சியைத் துல்லியமாகக் கணிப்பது கடினம் என்பதால், உத்தியோகபூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருக்காமல் பொதுமக்கள் முன்கூட்டியே விழிப்புடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வைத்தியர் வசந்த சேனாதீர எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |