அமெரிக்க சபாநயகர் தைவான் சென்று திரும்பியதன் எதிரொலி - தைவானுக்குள் ஏவுகணைகளை வீசி சீனா அதிரடி!
சீன இராணுவப் பயிற்சியின் போது, தைவானுக்குள் ஏவுகணைகள் வீழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானுக்கு 12 மைல்கள் தொலைவில் முன்னெடுக்கப்படும் இந்தப் பயிற்சியில் முதன்முறையாக முக்கிய பகுதிகளை சீனா இணைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, சீனா தனது இராணுவப் பயிற்சியின் போது ஏவுகணைகளை வீசியதாக தைவான் தற்போது தெரிவித்துள்ளது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தைவானுக்குள் ஏவுகணைகளை ஏவிய சீனா
தைவானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கரையோரங்களில் சீனா ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தங்கள் நாட்டு பாதுகாப்பு அமைப்புகளை தயார்ப்படுத்தியுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2-ம் உலகப்போருக்கு பிறகு சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறி வருகிறது.
ஆனால் சீனாவோ, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.
அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா
இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்று திரும்பியுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது.
ஆனாலும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பினார். இந்த சூழலில் தான் தைவானை சுற்றி சீனா மிகப்பெரிய இராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
