சீனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி! உலக அரங்கில் பேசுபொருளாகிய தாய்வான் தேர்தல்
சீனாவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில் தாய்வானில் அந்த நாட்டுக்கான அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்றைய தினம் (13) இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்தத் தேர்தல் மாலை 4 மணி வரை இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தேர்தல் முடிவுகள்
தாய்வானில் அமைக்கப்பட்டுள்ள 17 ஆயிரத்து 795 வாக்கெடுப்பு நிலையங்களில், சுமார் 19.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்று இடம்பெறுகின்ற இந்த தேர்தலின் முடிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமையன்று (15) வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கட்சியின் லாய், குவோ மின் டாங் கட்சியின் ஊ யூ ஹி (Hou Yu-ih) மற்றும் தாய்வான் மக்கள் கட்சியின் கோ வென்-ஜே ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் என்பவற்றை பாதுகாக்கும் முக்கிய விடயமாக இந்த தேர்தல் திகழ்வதால் வேட்பாளர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
தேர்தல் சட்டங்கள்
மேலும், வாக்காளர்களின் நேர்மையை பாதுகாக்கும் வகையில் தேர்தல் சட்டங்கள் தாய்வானில் மிகக் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிரவும்,வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் படங்கள் அல்லது காணொளிகளை பதிவு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானில் அதிபரை நேரடியாகத் தோ்ந்தெடுப்பதற்காக 8ஆவது முறையாக இந்த அதிபர் தேர்தல் இடம்பெறுகிறது, வேட்பாளர்களிடையே கடுமையான போட்டி நிலவுவதைப்போல, தங்கள் சுதந்திரத்தை பேணுவதற்கான சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருப்பதால் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.
இன்றைய அதிபர் தேர்தல் தாய்வானில் சீனாவின் எதிர்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் என்பதால் இதன் முடிவுகள் உலக அரங்கில் முக்கிய பேசுபொருளாகவும் அனைவாராலும் மிகுந்த ஆர்வத்துடனும் கவனிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |