தாய்வானுக்குள் அத்துமீறிய சீன போர் விமானங்களால் பரபரப்பு
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தாய்வான் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வழி, கடல்வழி மூலம் உக்ரைன் மீது ரஷ்யா மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உலகப்போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் மற்றொரு புறம் சீனாவின் போர் விமானங்கள் இன்று தாய்வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.
சீனாவின் விமானப்படைக்கு சொந்தமான 8 ஜே-16 ரக போர் விமானங்கள் உள்பட 9 விமானங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தென் சீன கடலின் பிரடாஸ் தீவின் வான்பரப்பில் நுழைந்ததாக தாய்வான் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டின் வான் பரப்பிற்குள் நுழைந்த சீன போர் விமானங்கள் சிறிது நேரத்தில் வான் பரப்பை விட்டு விலகி சென்றதாக தாய்வான் தெரிவித்துள்ளது.
