இலங்கை உட்பட 12 நாடுகளுக்கு சுற்றுலா விசாவை ரத்து செய்த வெளிநாடு!
இலங்கை உட்பட 12 நாடுகளுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்திவைக்க தைவான் வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தைவான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இருப்பினும், தைவான் அரசாங்க நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த முடிவு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
தடையிலிருந்து விலக்கு
சர்வதேசக் கூட்டம், விளையாட்டுப் போட்டி அல்லது கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களுக்காக தைவானுக்கு வருபவர்களுக்கும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Image Credit: Vacations & Travel
மேலும், மருத்துவ சிகிச்சைக்காக தைவானுக்கு வருபவர்கள் அல்லது தைவான் குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களை இந்த முடிவு பாதிக்காது என்றும் தெரியவருகிறது.
புதிய விதிமுறைகளின் கீழ் விசா விண்ணப்பதாரர்கள், சிங்கப்பூரில் உள்ள தைவான் பிரதிநிதி அலுவலகத்திலோ அல்லது சென்னையில் உள்ள பொருளாதார மற்றும் கலாச்சார மையத்திலோ தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தைவான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள்
இருப்பினும், தைவானுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு, தைவான் அடையாள அட்டை வைத்துள்ள அங்கேயே வசிக்கும் ஒரு தைவான் குடிமகன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை உறுதிப்படுத்த காவல் துறை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

அத்துடன், புதிய விதிமுறைகளின்படி தைவானுக்கு வரும் பயணிகள் தங்களிடம் போதுமான நிதி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தைவான் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்