கொழும்பில் வியாபாரிகளை குறிவைத்து பல மில்லியன் மோசடி! முக்கிய கட்சி பெண் உறுப்பினர் அதிரடி கைது
புறக்கோட்டையில் உள்ள ஆறு துணிக்கடை வியாபாரிகளிடம் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் ஹொரான நகர சபை உறுப்பினர் ரேணுகா தமயந்தி வத்தளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வியாபாரிகளை ஏமாற்றி, போலி காசோலைகளை வழங்கி சுமார் 160 மில்லியன் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வியாபாரிகளை அவர் சில காலமாக தவிர்த்து வந்த நிலையில், அவர் சிறிகொத்தாவிற்கு வருகை தந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்றுமுன்தினம் 18ஆம் திகதி வியாபாரிகள் காவல்துறையினருடன் அங்கு சென்றுள்ளனர்.
விளக்கமறியல் உத்தரவு
அங்கு காவல்துறையினருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, மிரிஹான காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பின்னர் மிரிஹான காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த முன்னாள் நகர சபை உறுப்பினர் குறித்த உண்மை விவரங்கள் தெரியவந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை காவல்துறையினரிடம் ஒப்படைக்க மிரிஹான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, நேற்று (19) வத்தளை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணை, வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்