இரத்தம் சிந்தத் தயார் - தலிபான்களுக்கு தலையிடியாக மாறியுள்ள விவகாரம்
ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றினாலும், பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் உள்ள போராளி குழுக்களுடன் தலிபான்களால் உடன்படிக்கு வரமுடியாமல் இருப்பதாக மேற்கத்தேய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியதுடன் புதிய ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தலிபான்களிடம் சிக்காமல் இருக்கிறது. அப்பகுதியில் நிலை கொண்டிருக்கும் போராளிக் குழுக்கள் தலிபான்களுடன் மோதலுக்கும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை அடிபணிய வைக்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு, அகமது மசூத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை அதிபர் அமருல்லா சாலே ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நூற்றுக்கணக்கான வீரர்கள் போருக்கு தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் உருவாகும் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தலிபான்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. தொடர்ந்து தலிபான்கள் அடக்குமுறையை கையிலெடுத்தால், ரத்தம் சிந்த தயார் என அப்துல் மசூத் எச்சரித்துள்ளார்.
தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்புகிறோம். எங்களுக்கு போர் நடத்த விருப்பமில்லை. ஆனால், அவர்கள் போர் தான் தீர்வு என்று நினைத்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம் என்று மசூத் தெரிவித்துள்ளார்.
தலிபான்களுக்கு அடிப்பணிய மறுக்கும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி இஸ்லாமிக் எமிரேட் முஜாகிதீன் படையினர் ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் உள்ள குழுக்களுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.