வீழ்ச்சியின் விளிம்பில் ஆப்கான்! தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை
Afghanistan
Economy
Taliban
By Chanakyan
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீழ்ச்சியின் விளிம்பில் உள்ள ஆப்கானிஸ்தானிய பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய நலன்களுக்கு அனைத்து ஆப்கானியர்களும் தங்கள் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஆப்கான் நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,