ஆப்கானில் 180 ஊடகங்களை இழுத்து மூடிய தலிபான்கள்
media
closed
afghanistan
taliban
By Sumithiran
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததிலிருந்து இதுவரை 180 ஊடகங்களை இழுத்து மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அதுமுதலாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தலிபான்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த 7 மாத காலகட்டத்திற்குள் ஆப்கானிஸ்தானில் இருந்த 475 ஊடகங்களில் 180 ஊடகங்களை தலிபான் இழுத்து மூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் அமைப்பு இதனால் 43 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்