தலிபான்களின் பிடியில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள்? செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவல்!
india
afghanistan
taliban
By Kalaimathy
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதால் தாலிபான்கள் நாட்டை கைப்பற்ற தொடங்கினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமானது.
ஆப்கானிஸ்தானில் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில் விமானநிலையத்தில் இருந்த இந்தியர்கள் 150 பேரை தாலிபான்கள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தியர்கள் 150 பேரை தாலிபான்கள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா வாசிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.
காபூல் தலிபான்கள் வசமானதையடுத்து அங்கு வசித்து வந்த மக்கள் நாட்டைவிட்டு வெளியேற விமானநிலையத்தில் முற்றுகையிட்டு விமானத்தின் பின் ஓடிய காட்சிகள் உலக அளவில் கவனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி