85% நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபன்கள்.. அதிர்ந்து போன உலக நாடுகள்
ஆப்கானிஸ்தானில் 85% நிலப்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆப்கானிஸ்தானிற்கான மருந்துகள் மற்றும் பொருட்களைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன.
தாலிபன்களின் தலைவனான பின்லேடனை சுட்டுக்கொன்ற பின்னரும் தலிபான்களின் தீவிரவாத செயல் அடங்கவில்லை என்பதுடன், ஒரு நாட்டின் நிலத்தை பெருமளவு கைப்பறிறயுள்ளமை உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த கூற்றை ஆப்கான் அரசு அதிகாரிகள் முற்றாக நிராகரிக்கிறார்கள்
ஆனால் உள்ளூர் ஆப்கானிய அதிகாரிகளோ, ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு முக்கியமான மாவட்டத்தை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக கூறுகிறார்கள்.
துர்க்மெனிஸ்தானின் எல்லையில் உள்ள வடக்கு நகரமான டோர்குண்ட் நகரத்தை ஒரே இரவில் தலிபான்களால் கைப்பற்றப்பட்டதாக ஆப்கான் அரசு படை அதிகாரிளும், தலிபான்களும் தெரிவிக்கிறார்கள்
சண்டையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆப்கானிய பாதுகாப்பு படையினர் மற்றும் அகதிகள் எல்லையைத் தாண்டி அண்டை நாடான ஈரான் மற்றும் தஜிகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் இந்த முன்னேற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள ரஷ்யா உள்பட பல்வேறு மேற்கு நாடுகள் , ஆப்கானிஸ்தானில் இனி தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கவலை அடைந்துள்ளன.
இதனிடையே தலிபான்கள் எவ்வளவு பிரதேசத்தை வைத்திருந்தார்கள் என்று கேட்டதற்கு, அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேரடி கருத்தை மறுத்துவிட்டார்.