தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமிழந்தமைக்கான காரணம் : அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளாலும் தேசியத் தலைவராலும் உருவாக்கப்பட்ட கொள்கையில் பயணிக்காமல் தேர்தல் காலத்தில் மட்டும் உச்சரித்து விட்டு நேர்மாறாக பயணிக்கின்றமை தெரியவருகின்ற நிலையில் மக்கள் படிப்படியாக அதிலிருந்து விலகினார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
16 வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகின்றது என்பது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தெளிவாக புலனாகியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய அரங்கைப் பயன்படுத்தி அரசியல் செய்வோருக்கு இனியும் நீங்கள் விசுவாசமாக நடந்து கொள்ளாவிட்டால் உங்களை முற்றுமுழுதாக ஓரங்கட்டுவோம் என்ற தெளிவான செய்தி கிடைத்திருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழ் வானொலியின் மனங்கள் பேசட்டும் சிறப்பு நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை தெரிந்துகொள்ள கீழுள்ள நேரலையை பார்வையிடுங்கள் .................
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
