முட்டி மோதும் அமெரிக்கா - சீனா! ஜோ பைடன் எடுத்த முடிவு
COVID-19
Joe Biden
Xi Jinping
United States of America
China
By Vanan
ஜோ பைடன் எடுத்த முடிவு
பொருளாதார பலத்தால் முட்டி மோதும் அமெரிக்கா மற்றும் சீன அதிபர்கள் இடையே இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வோஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த வாரம் சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஒரு போதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறிய பைடன் விரைவான வளர்ச்சியில் இருந்து நிலையான வளர்ச்சிக்கு செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
கொவிட் தொற்றில் இருந்து குணமடைவு
[RND6A\
இதேவேளை, கொவிட் தொற்றால் பாதிப்புற்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பெரும்பாலான COVID-19 அறிகுறிகளிலிருந்து குணமடைந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.
அந்த வகையில் இந்த வாரம் பணிகளை மீண்டும் முழுமையாகத் தொடரத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்