மீண்டும் வேலைநிறுத்தத்தில் குதிக்கும் சுகாதார ஊழியர்கள்
திட்டமிட்டபடி, நாளை (18) காலை 7:00 மணிக்கு தொடங்கி 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானமானது, இன்று (17)எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைமை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு
இதன்போது , குறித்த விடயத்தை நிதி அமைச்சகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய சங்கத்தின் தவிசாளர் ரவி குமுதேஷ் அறிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில் அரச தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒருபகுதியாக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று (17) 12.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும், மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்களும் இன்று 12.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் .
அத்தோடு, மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்