தமிழரசு கட்சியின் கலந்துரையாடலை புறக்கணித்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன்! பீட்டர் இளஞ்செழியன் பங்கேற்பு
Ilankai Tamil Arasu Kachchi
M A Sumanthiran
S. Sritharan
By pavan
இலங்கை தமிழரசு கட்சியின் கலந்துரையாடல் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
எனினும், குறித்த கலந்துரையாடலில் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் கலந்து கொள்ளவில்லை என களத்தில் உள்ள எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலுக்கு தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த பீட்டர் இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த சந்திரசேகரம் பரா என்பவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி