தமிழர் பகுதி பெண்களின் மோசமான செயல் - தென்னிலங்கையில் அரேங்கேறும் கொடூரம்
வடக்கு மாகாணத்தை சேர்ந்த யுவதிகள் மற்றும் பெண்கள் கொழும்புக்கு வந்து தவறான தொழிலில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது என காவல்துறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பல சந்தர்ப்பதங்களில் இந்த விடயம் தொடர்பான நிலைமை தெரியவந்தாகவும் பணியகம் கூறியுள்ளது.
கடந்த வாரம் காவல்துறை சிறுவர்மற்றும் பெண்கள் பணியகத்தினர், கொழும்பு கோட்டை, மருதானை பிரதேசங்களிலும் மகரகமை பிரதேசத்திலும் 19 பெண்களை கைது செய்தனர்.
"வருமானம் போதவில்லை"
இவர்களிடம் விசாரணைகளை நடத்தியதில் இவர்களில் 11 பேர் மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் இந்த பெண்கள் ஆடைத்தொழிற்சாலைகளில் சேவையாற்றுவதற்காக கொழும்புக்கு வந்துள்ளனர்.
அதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை என்ற காரணத்தினால், இவர்கள் மேற்படி தவறான தொழிலில் ஈடுபட்டு வந்தாக அந்த பெண்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
