கனடாவில் மாயமான தமிழ் சிறுவன் - பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை
கனடாவில் தமிழ் சிறுவன் ஒருவர் காணாமல்போனநிலையில் அவனை கண்டுபிடிக்கபொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.
கிழக்கு க்வில்லிம்பரி நகரத்தில் வசிக்கும் 15 வயதுடைய ஆதித்யா வசந்தன் எனும் சிறுவனே காணாமல்போனவனாவான்.
இந்நிலையில் , யோர்க் பிராந்திய காவல்துறையினர் அவனை தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.
ஆதித்யா வசந்தன், கடைசியாக, ஜனவரி 20, 2022, வியாழன் காலை 11 மணியளவில், மார்க்கம் நகரின் 16வது அவென்யூ மற்றும் மார்க்கம் வீதி பகுதியில் அமைந்துள்ள அவனது பாடசாலையில் காணப்பட்டான். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் சிறுவன்ஆதித்யா வசந்தன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள்1-866-876-5423, ext.7541 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
MISSING YOUTH FROM EAST GWILLIMBURY- YRP is looking for public assistance to locate a missing 15-year-old Aadhithya VASANTHAN, last seen in the area of 16th Ave and Markham Rd, Jan 20th, around 11 a.m.https://t.co/kTs6l8kaxH pic.twitter.com/5fLeUOWk0O
— York Regional Police (@YRP) January 21, 2022
