கனேடிய பொது தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள் !
கனேடிய (Canada) பொதுத் தேர்தலில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய பொதுத் தேர்தலில் ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் வேட்பாளர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும், இருவர் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பிலும் களமிறங்குகின்றனர்.
பொதுத் தேர்தல்
கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய கரி ஆனந்தசங்கரி ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அத்துடன், மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினராக பணியாற்றும் ஜுவொனிற்றா நாதன், புதிய முகமாக மார்க்கம் பிக்கரிங்-புரூக்ளின் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் களமிறங்குகிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியில் லைனல் லோகநாதன் போட்டியிடுகின்றார்.
வெற்றி வாய்ப்புகள்
முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன், அதே கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மார்க்கம்-யூனியன்வில் தொகுதியில் நிற்கின்றார்.
இந்த நான்கு தமிழ் வேட்பாளர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
மேலும், தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிலர், வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
