தமிழர் தாயகத்தில் அரங்கேறும் கொடுமைகளை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் டீனா ஜோர்டிக்காவிற்கும் (Tiina jortikka) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பின் போது, தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும், திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும், சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் டீனா ஜோர்டிக்காவுக்கு விளக்கியுள்ளார்.
பாதுகாப்பான வாழ்க்கை
இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியமும் பின்லாந்தும் தமிழர் தாயகத்தில் நடைபெறும் மனிதவுரிமை மிறல்கள் தொடர்பான விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக டீனா ஜோர்டிக்கா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதை தாமும் விரும்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்லாந்தின் அமைச்சுப் பிரதிநிதிகளுடனும், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பு வாய்ந்த மேலாளர்களுடனும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)