ஜிம்மி கார்டருடன் பயணித்த ஈழத்தமிழர்...! அமெரிக்காவில் நிறைவுற்ற போராட்ட பயணம்
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவரும், சர்வதேச மனித உரிமைப் பரப்பில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவருமான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அமெரிக்காவில் காலமான செய்தி, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மாணவர் பேரவையின் தொடக்ககால உறுப்பினர் என்ற வகையில், ஈழப் போராட்டத்தின் கருத்தியல் தளத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த இவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழ் மக்களின் உரிமைக்காகவே அர்ப்பணித்திருந்தார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அந்த இராஜதந்திர உறவுகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மேற்குலகின் அதிகார மையங்களுக்குக் கொண்டு சென்றவர்.
நியூயோர்க் சர்வதேச மன்னிப்புச் சபையில் (Amnesty International) அவர் ஆற்றிய நீண்டகாலப் பணி, ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சர்வதேச ரீதியாக ஆவணப்படுத்துவதிலும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதிலும் ஒரு முக்கிய பாலமாக அமைந்தது.
போராட்டக் களத்தின் ஆரம்பகால வித்தாக இருந்து, பின்னர் சர்வதேச இராஜதந்திர மேடைகளில் தமிழர்களின் குரலாக ஒலித்த முத்துக்குமாரசாமி அவர்களின் மறைவு, தமிழ் தேசிய வரலாற்றில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்ததையே காட்டுகின்றது.
இந்தநிலையில், முத்துக்குமாரசாமி அவர்கள் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களுக்காக ஆற்றிய வரலாற்றுப் பணிகள் என்ன என்பதையும், அவரது வாழ்வு இன்றைய தலைமுறைக்குச் சொல்லும் செய்தி குறித்தும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய செ்யதிகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |